முக்கிய செய்திகள்

இந்தோனேசியா குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சாதனை

July 29, 2019

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலிடம் மோதினார். இதில் மேரி கோமின் தாக்குதலை தொடக்கத்தில் இருந்தே சமாளிக்க முடியாமல் பிராங் ஏப்ரல் திணறினார் வந்தார் .

இந்நிலையில் இறுதியில் பிராங் ஏப்ரலை எந்த புள்ளியும் எடுக்க விடாமல் 5-0 என்ற நேர்செட்டில் மேரி கோம் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் . இதேபோன்று சிம்ரன்ஜித் கவுர் உட்பட 6 பேர் தங்கப் பதக்கங்களையும், 2 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.

Top