முக்கிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்…

October 31, 2019

மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், ஏஐடியுசி பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் குருதாஸ் தாஸ் குப்தா. 83 வயதான இவர் கடந்த சில மாதங்களாக இருதயம், சிறுநீரக கோளாறு மற்றும் முதுமைசார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Top