முக்கிய செய்திகள்

டி-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு

September 3, 2019

டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையும் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் தொடரை மனதில் வைத்து டி20 போட்டிகளிலிருந்து விலகுவதாக மிதாலி தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த மிதாலி ராஜ், இதுவரை 89 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் மட்டும் 2,364 ரன்களை திரட்டிய மிதாலியே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களை திரட்டிய வீராங்கனையாக திகழ்கிறார். இவரது சராசரி 37.5 ஆக உள்ளது. அதிகபட்சமாக 97* ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த மார்ச்சில் கவுகாத்தி நகரில் இங்கிலாந்து அணியை எதிர்த்த இந்திய அணியில் விளையாடி உள்ளார்.

Top