முக்கிய செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கியது

September 11, 2019

சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிகப்பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி 2 ஆயிரத்து 551 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாக உள்ளது.

இதன் மொத்த நீர் கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி ஆகும்.ஆனால் ஏரி தூர் வாரப்படாததால் நீர் கொள்ளளவு 3 ஆயிரத்து 109 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதையடுத்து, மொத்த நீர் கொள்ளளவை மீட்டெடுக்கும் வகையில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப்பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், தூர் வாரும் பணியின் மூலம் 536 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்க முடியும் என்றார்.

Top