முக்கிய செய்திகள்

முதல்வர் வளர்த்த நாய் இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப்பதிவு…

September 16, 2019

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் இறந்ததை அடுத்து, அதற்கு சிகிச்சை அளித்த இரு கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் சந்திரசேகர் ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், சில நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு நாய்க்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மிகவும் சோர்ந்து காணப்பட்டதாக கூறப்படும் அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் நாய்க்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் ,தொடர் சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அந்த நாய், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டது. இது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Top