முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

October 9, 2019

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அக்., 20க்கு மேல் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 செ.மீ., மழையும், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 7 செ.மீ., குளச்சலில் 5 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

Top