முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகம்…

September 11, 2019

மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானினின் முக்கிய நகரங்களில் பால் விலை புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, பால் விலையை விட குறைவாகவே காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.113 க்கும், டீசல் ரூ.91 க்கும் விற்கப்படுகிறது. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மொகரத்தின் போது பால் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவை அதிகரிப்பின் காரணமாக கராச்சி, சிந்து உள்ளிட்ட பகுதிகளில் பால் விலை லிட்டருக்கு ரூ.120 முதல் 140 வரை விற்பனையாகிறது. மொகரத்தை முன்னிட்டு ஊர்வலமாக செல்பவர்களுக்கு வழங்குவதற்காக பால், ஜூஸ் உள்ளிட்டவைகள் தயார் செய்வதற்காக அதிகமாக பால் தேவைப்பட்டதால் பால் விலை உயர்ந்துள்ளது. பொதுவாக பாக்.,ல் பாலின் அதிகாரப்பூர்வ விலை ரூ.94 ஆகும்.

Top