முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பெரும்பாலன மாவட்டங்களில் மிதமான மழை

October 22, 2019

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால், குளுமையான சூழல் நிலவுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், குளுமையான சூழல் நிலவியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

Top