முக்கிய செய்திகள்

நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை-எடியூரப்பா

August 13, 2019

கர்நாடகாவில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 48 பேர் பலியாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு உடனடியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடகாவில் கொடித்தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Image

மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி தற்போது வரை 48 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் சிவமோகா மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் எடியூரப்பா, வெள்ளத்தால் மாநிலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வருகிற 16ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.

Top