பத்தொன்பதாவது நாளான இன்று அத்திவரதருக்கு நீலவண்ணப் பட்டைக் கொண்டும் வெட்டிவேர் மாலை ஏலக்காய் மாலை உள்ளிட்டவற்றைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று சற்று முன்பு வரை 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வரிசையில் காத்திருக்கின்றனர்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மேற்கு ராஜ கோபுரம் மற்றும் நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஓய்வெடுக்கும் நிலையில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அவர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.