முக்கிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 பேர் விண்ணப்பம்

August 2, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் பிசிசிஐயிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் உள்ளிட்டோரும் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயிற்சியாளர்கள் குழுவில் இருப்பவர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில், மீண்டும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Top