முக்கிய செய்திகள்

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்…

August 12, 2019

தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.இஸ்லாமிய நாள்காட்டியின் 12ஆம் மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய இறை தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுவதால் இதனை தியாக திருநாள் என்றும் கூறுவர்.இந்த தினத்தில் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்திய பின்னர் இனிப்பு மற்றும் இறைச்சி உணவை பகிர்ந்து உண்ணுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பக்ரீத் திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Top