முக்கிய செய்திகள்

ட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…

October 31, 2019

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான தடை நவம்பர் 22 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Top