முக்கிய செய்திகள்

69வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி…

September 17, 2019

69வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார்.பிறந்த நாளை ஒட்டி குஜராத் வந்த நரேந்திர மோடி, இன்று காலை நர்மதா மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை ஆளுநர் ஆச்சாரியா தேவ்விரத், முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, சர்தார் அணைப் பகுதிக்குச் சென்று, அணை நிரம்பியுள்ளதை ஆய்வு செய்த நரேந்திர மோடி, அங்குள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையையும் பார்வையிட்டார்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளத்திற்குச் சென்ற நரேந்திர மோடி, அங்குள்ள படகுக் குழாமில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

69வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற உள்ளார். தனது பிறந்த நாளில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நரேந்திர மோடி, காந்தி நகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.

Top