முக்கிய செய்திகள்

தமிழகம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி

October 9, 2019

தமிழகம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.வருகின்ற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை தமிழகத்திற்கு பெருமை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி என தெரிவித்திரார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில்,பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவிற்கும் தமிழகத்திற்கும் வணிக ரீதியிலான தொடர்பு இருந்துள்ளது,சீனப் பயணியான யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்து சென்றுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Top