முக்கிய செய்திகள்

41 வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரம் வெளியீடு…

September 16, 2019

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி 41 நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.முதல்வர் இதுவரை கிட்டத்தட்ட 14 நாட்கள், 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் 41 நிறுவனங்களுடன் முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

Image result for edappadi palanichamy london

இதன் மூலம் மொத்தம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்களை, அறிக்கையாக தமிழக அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.இதன்படி அமெரிக்காவில், 35 நிறுவனங்களில் இருந்து 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 24 ஆயிரத்து 720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் துபாயில், 6 நிறுவனங்களில் இருந்து 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

Top