முக்கிய செய்திகள்

அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக

October 31, 2019

அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவரான ராகுல் காந்தி, தனது தற்போதைய வெளிநாட்டு பயணம் குறித்த தகவல்களை, கண்டிப்பாக வெளியிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியிருக்கிறது.அண்மையில், ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி பதிலளித்த காங்கிரஸ் கட்சி, தியானம் செய்வதற்காக, ராகுல்காந்தி வெளிநாட்டிற்கு பயணமாகியிருப்பதாகவும், கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட பயணங்களை போன்றது தான் இது என்றும் கூறியது.

இந்நிலையில், ராகுல் காந்தி அடிக்கடி மேற்கொள்ளும், வெளிநாட்டு சொகுசு பயணங்கள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுவதால், அதுகுறித்த உண்மைத் தகவல்களை, நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியிருக்கிறது. ராகுல் காந்தியின் 16 வெளிநாட்டு பயணங்களில், 9 பயணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் பாஜக சாடியுள்ளது.

Top