முக்கிய செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

September 16, 2019

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்டியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் ,வெப்பசலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Image result for vaanilai aaivu maiyam

குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

Top