முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

September 17, 2019

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

Top