முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்

October 22, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Top