முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வெளியான வழிமுறை…

October 30, 2019

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகளை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்படும். 5ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும். 8ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் நடத்தப்படும். பொதுத்தேர்வுகள் அனைத்தும் 60 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Top