முக்கிய செய்திகள்

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை…

October 9, 2019

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, மதுபாட்டில்கள், செல்போன்கள் போன்ற வசதிகள் தாராளமானக் கிடைப்பதாகவும், மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணி முதல் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், 37 கத்திகள், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா புகைக்கும் குழாய்கள் மதுபாட்டில்கள் சிக்கின. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைகளிலும் சோதனை நடந்தது.

Top