முக்கிய செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது புகார்…

October 9, 2019

படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது  தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் ஞானவேல் ராஜா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் சிம்பு ஒப்புக் கொண்ட படி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Image result for simbu

ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு பின்னர் வெளிநாடு சென்றதால் தொடர்ந்து படபிடிப்பினை நடத்த இயலாமல் போனதாகவும் இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல்ரஜா சார்பில் தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி சேகரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

Top