முக்கிய செய்திகள்

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு

October 31, 2019

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் விவகாரத்தில் கைதான நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என்று கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாகவும் அவர் மீது 2009 ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது.மோசடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை மாஜிஸ்திரேட் ஆறாவது கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்நிலையில்,சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Top