முக்கிய செய்திகள்

மீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

October 31, 2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்தது குறித்து தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்தும் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தீபாவளி நாளில் கூட மழையிலும், அதிகாரிகளும், மீட்பு படையினரும் அயராது பாடுபட்டனர். ஆனால் அதைக்கூட ஸ்டாலின் கொச்சையப்படுத்துவதாக தெரிவித்தார். நான் ஏதோ கோபத்தில் பேசுகிறேன் என ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்தார்.ஆனால் ஸ்டாலின் தான் எதற்கெடுத்தாலும் அரசியல் காழ்புணர்ச்சியுடன் குறை சொல்கிறார்.

2009ல் தேனி மாவட்டத்தில் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது திமுக அமைச்சர்கள் யாரும் அதன் அருகிலேயே போகவில்லை. அவர்களிடம் ஏன் போகவில்லை, ஏன் மீட்கவில்லை என கேட்டதில்லை. ஆனால், நான்கு நாட்களாக அமைச்சர்கள் அங்கேயே தங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை கொச்சைப்படுத்துகிறார். ஆபத்தில் இருப்பவர்களை மீட்பது தான் பேரிடர் மீட்பு குழுவினரின் பணி. பயிற்சி பெற்ற துணை ராணுவத்தினர்களை உள்ளடக்கியது தான் பேரிடர் மீட்பு படை. மீட்பு பணிகள் குறித்து விரிவாக கூறியும் ஸ்டாலின் விமர்சனம் செய்வது வேதனையளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Top