முக்கிய செய்திகள்

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பு-அமீர்

August 12, 2019

தேசிய விருது தேர்வு குழுவில் திரைப்படத்துறை சார்ந்தவர்களே இடம்பெற வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். தந்தி டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வாழ்க்கை, மொழி புரிதல் இல்லாதவர்களால் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்ய முடியாது என்று கூறினார். தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதை பற்றி, தேசிய அளவில் ஆளுமை பெற்ற ரஜினிகாந்த் போன்றவர்கள் குரல் கொடுத்தால் இனி வரும் காலங்களில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கு விருது கிடைக்கும் என்றும் அமீர் தெரிவித்தார்.

Top