முக்கிய செய்திகள்

தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்-ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

October 9, 2019

தேசியளவிலான பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதார கணக்கெடுக்கும் பணி கடந்த 1977ம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்தாண்டிற்கான பொருளாதார கணக்கெடுக்கும் பணியை சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Top