பிகில் படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கானா, வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதையடுத்து #BigilHits200CRs என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.பிகில் படம் முதல் 4 நாட்களிலேயே சென்னை வெற்றி திரையரங்கில் டாப் 10 லிஸ்டில் இணைந்துள்ளது.பாகுபலிக்கு பிறகு வார நாட்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது பிகில் படம் தான் என்று ராம் சினிமாஸ் திரையரங்கம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக பிகில் படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக சென்னை ரோஹினி திரையரங்கம் தெரிவித்துள்ளது.ப்ரான்ஸ் நாட்டில் முதல் 3 நாட்களில் 20000 டிக்கெட்டுகள் விற்று பிகில் படம் சாதனை படைத்துள்ளது.இங்கிலாந்தில் முதல் வார இறுதியில் பிகில் படம் £ 375,089 வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.பிகில் படம் முதல் 4 நாட்களில் திரையிடப்பட்ட அனைத்து காட்சிகளிலும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக காசி திரையரங்கம் தெரிவித்துள்ளது.