முக்கிய செய்திகள்

கொலம்பியா நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதியில் பயங்கர தீவிபத்து…

September 11, 2019

கொலம்பியா நாட்டின் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலையடிவார சுற்றுலாத்தலங்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.அந்நாட்டின் காலி நகரில், மலையடிவாரத்தை ஒட்டி கிறிஸ்து அரசரின் நினைவு சின்னம் அமைந்துள்ளது. இதனை காண உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து செல்வதால் அந்த இடம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அந்த சுற்றுலா தலத்தை சுற்றி சுமார் 450கிலோ மீட்டர் தூரத்துக்கு தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், கொளுந்துவிட்டு எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்துக்கு பின் அணைத்து, நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top