முக்கிய செய்திகள்

ஜோக்கர் எனும் அரக்கன்…

October 5, 2019

ஜோக்கர் திரைப்படம் அக்டோபர் 2 அன்று தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஜோக்கர் இந்த கதாபாத்திரத்தை மற்ற கதாபாத்திரம் போல ஒரு நடிகரால் அவ்வளவு எளிதாக ஏற்று செய்து விடமுடியாது . இதற்க்கு சான்று இதற்கு முன் ஜோக்கர் கேரக்டர்களில் நடித்த சிலரே எடுத்துக்காட்டுகள். பேட்மேனின் முக்கிய வில்லனாக கருதப்படும் ஜோக்கர் அவரின் மற்ற வில்லன்கள் போல இல்லாம அவருக்கென்று தனித்தன்மை கொண்டவர் . அவர் பேசும் வசனங்கள் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவர் சொல்வது சரிதானே என்று நமக்கு தோன்றும் ஆனால் அவற்றை சரி செய்வதற்கு அவர் கையாளும் முறையே அவரை வில்லனாக காட்டுகிறது . இந்த ஜோக்கர் கேரக்டர் ஏற்று நடித்த நடிகர்கள் அந்த கதாபாத்திரம் அவர்களை விட்டு விலகவதற்கு கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார் .

Image result for joker

ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று கட்சிதமாக நடித்த ஹீத் லெட்ஜ்ர் தன்னை ஒரு மோட்டலில் தனிமைப்படுத்திகொண்டு அதற்காக வித்யாசமான முறைகளை கையாண்டு அந்த கதாபாத்திரத்துக்கான தனித்துவமான சிரிப்பு மனேரிசம் என அந்த காதாபாத்திரத்திற்காக தன்னை வடிவமைத்து கொண்டார். அதனால் அவர் இன்சொம்னியாவில் பாதிக்கப்பட்டதாகவும் ஜோக்கர் கேரக்டர் தனக்குள் இறங்கி ஆட்டிப்படைப்பதாகவும் ஒரு பத்திரிகைக்கு தந்த பெட்டியில் தெரிவித்தார் பின் தூக்கத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதால் இறந்து போனார் .

 

Image result for joker

ஆனால் ஜோக்கர் கேரக்டர் அவரை பலிவாங்கி விட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர் .அக்வின் பீனிக்ஸ் போன்ற ஒரு மெத்தெட்ஆக்டர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போகிறார் என்று தெரிந்தவுடன் பலரும் லெட்ஜ்ர் போன்று இவருக்கும் நடந்த்து விடுமோ என்று பயந்தனர். ஆனால் பீனிக்ஸ் கையாண்டது வேறு முறை பழைய ஜோக்கர் போல் அல்லாமலும் ஜோக்கருக்கான தனித்துவம் கெடாத வாரும் தன்னை மாற்றி கொண்டார் , அதற்காக 25 கிலோ தனது எடையில் இருந்து குறைத்தார் . பின் man who laughs என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து தனது கதாபாத்திரத்தை வடிவமைத்து கொண்டார் .

 

Related image

சமூகத்தால் ஒடுக்கப்படும் ஒருவன் அனைத்தையும் உடைத்து தனது கோபத்தை சமூகத்தின் மேல் காட்டினாள் எப்படி இருக்கும் என்ன ஆகும் என்பதே ஜோக்கர் திரைப்படம்.சமூகத்தை அனைவரும் பார்த்து சிரிக்கும் ஜோக்கர் கேரக்டர் வைத்து கேள்வி கேட்பதுதான் இதன் சிறப்பம்சமே . ஜோக்கர் திரைப்படம் அதிகம் வன்முறை இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளார் . மேலும் அமெரிக்காவில் ஜோக்கர் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இளைஞர்கள் யாராவது ஜோக்கர் வேடமணிந்து வருகிறார்களா என்று கண்காணிப்பதற்காக , ஏனென்றால் ஜோக்கர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் எளிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடும் .திரைப்படத்தில் காட்டுவது போல அனைவரும் தங்களை ஜோக்கராக நினைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது .அது தான் ஜோக்கர் கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் .இந்த கதாபாத்திரம் பார்ப்பவர்களை எந்த அளவுக்கு கவர்கிறதோ அதே போல அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகரையும் ஆட்கொண்டுவிடும் .

Top