முக்கிய செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க 3 நாள் மட்டுமே உள்ளதால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

August 13, 2019

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்றும் லட்சக்கணைக்கில் திரண்டுள்ளனர். அதிகாலையிலே காத்திருந்த பகதர்கள் தரிசனம் செய்து வருகிறர்கள். வரும் 16 ந் தேதியுடன் தரிசனம் நிறைவடைவகிறது.

இன்னும் 3 நாட்களே உள்ளதால் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். இதனால் தரிசன வரிசைகள் காலையிலேயே நிரம்பியுள்ளன. 3 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்று 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Top