முக்கிய செய்திகள்

காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு – பள்ளிக்கல்வித்துறை

September 16, 2019

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடந்துவருகிறது. வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காலாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்லும் நிலை உண்டாகியுள்ளது.இந்நிலையில் ,தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம், கட்டாயம் கிடையாது எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார் .

Top