முக்கிய செய்திகள்

சென்னையில் கடல் நீல நிறத்தில் மாறியது…நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்…

August 19, 2019

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

Image result for blue sea chennai beach

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.இச்சம்பவத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் நேற்றைய தினம் பரபரப்பாக காணப்பட்டது.

Top