முக்கிய செய்திகள்

பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து மூன்று ஆண்டுகள் விலக்கு…

September 17, 2019

பள்ளிகளில் பயின்று வருகிற 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டிலுள்ள பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது வதந்தி என்றும் அரசின் சார்பில் அதுபோன்ற முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

Top