முக்கிய செய்திகள்

டி.டி.வி. தினகரன் விரைவில் திமுகவுக்கு சென்றுவிடுவார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

September 11, 2019

அமமுக.வில் இருந்து விலகி டி.டி.வி. தினகரன் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் குறித்த கேள்விக்கு அவர் தி.மு.க.வுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், வெளிநாடு சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பினால் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வுக்குச் சென்று விடுவார் என விருதுநகரைச் சேர்ந்த அமைச்சர் கூறுவதாகவும், அமைச்சர்கள்தான் தங்களை காப்பாற்றிக் கொள்ள தி.மு.க.வுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.முதலமைச்சரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 8-வது அதிசயம் என்று கூறியது குறித்த கேள்விக்கு அவர் 9-வது அதிசயம் என டி.டி.வி.தினகரன் பதில் அளித்தார்.

Top