முக்கிய செய்திகள்

பிகில் திரைப்படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

October 22, 2019

பிகில் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வெளியாகும் நாள் நெருங்கி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்களே அதிகம் காணப்பட்டு வந்த நிலையில் இம்முறை படம் வெற்றியடைய வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர் .இதனால் விஜய் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலை வாரிக் குவித்து வெற்றி பெறுமா ‘பிகில்’ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Top