முக்கிய செய்திகள்

மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி…வெளியானது மாஸ் அப்டேட்…

October 31, 2019

விஜய் சேதுபதி எப்பொழுதும் தன்னை ஹீரோ என்று பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வரிசையில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த படம் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பெற்றது. சீதக்காதியில் முதியவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அடுத்து இன்னொரு தெலுங்கு படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ஏஏ20 என்று பெயர் வைத்துள்ளனர். இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.தற்பொழுது வரை விஜய் சேதுபதியிடம் கைவசமாக நிறைய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது .

Top