முக்கிய செய்திகள்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …

October 31, 2019

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிற்கின்றனர்.

Top