முக்கிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு…

August 24, 2019

லதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மையா தனது புதிய படத்தில் வாய்ப்பளித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் ரேணு மண்டல். இவர் வயிற்றுப் பிழைப்புக்காக பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான ஏக் பியார் கா நக்மாஅ ஹேய் என்ற பாடலை ரயில்வே நடைமேடையில் பாட அதனால் கவரப்பட்டவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

ரேணுவில் குரலில் கவரப்பட்ட பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மையா தனது அடுத்த படமான ஹேப்பி ஹர்டி அண்ட் ஹீர் படத்தில் ரேணுவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

ரேணுவை பார்த்த மாத்திரத்திலேயே அவரது குரலில் தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ள ஹிமேஷ், திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டுபிடித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்ற அறிவுரையை கடைபிடித்து வருவதாகவும், ரேணுவின் குரலை அனைவரும் கேட்க செய்வதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

Top