முக்கிய செய்திகள்

தோனியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த விராட் கோலி…

September 3, 2019

அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை தோனியிடம் இருந்து விராட் கோலி கைப்பற்றினார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Image result for ms dhoni and virat kohli

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றி, விராட் கோலி கேப்டனான பின்னர் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் பெற்ற 28ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தகுந்தது .இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டுள்ளார். அதில் 28 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் மட்டுமே தோல்வி ஏற்பட்டுள்ளது. 10 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வெற்றி சதவீதம் 58.33ஆக உள்ளது.

Image result for ms dhoni and virat kohli

இதன் காரணமாக இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை தோனியிடம் இருந்து விராட் கோலி கைப்பற்றியுள்ளார்.60 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளை வென்று கொடுத்த தோனி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலி உள்ளார். அவரது தலைமையில் 49 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றி

Top