முக்கிய செய்திகள்

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி 3 நாட்களில் நிறைவு பெறும்-பொதுப்பணித்துறை

August 13, 2019

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி எட்டு மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் புதிய மேலணை 387 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்திருந்தார்.

Image

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 38 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறும் என்றும், காவிரியில் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டாலும் தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Top